ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றில் 03 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

மெல்பேர்னில் உள்ள இலங்கை பௌத்த விகாரையின் தலைவர் நாவோதுன்னே விஜித தேரர் 03 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

68 வயதான அவர் இன்று (18) மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.

1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மெல்போர்னின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த விகாரை ஒரு தம்மப் பள்ளியையும் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Springvale மற்றும் Keysborough ஆகிய பகுதிகளை அண்மித்த பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இன்று நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் விகாரையின் தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 10ம் திகதி நடைபெறும்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!