தென்கொரிய விமான விபத்தில் மாயமானவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு பயணிகளை தவிர எஞ்சிய அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 181 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களில் 179 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தேடுதலின் போது விமானத்தின் பின்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இருவர் கேபின் பணியாளர்களாவர்.
உயிரிழந்தவர்களில் 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.





