இலங்கை முழுவதும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கை : 15000 பேர் கைது!
இலங்கையில் பொலிஸாரினால் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஹெராயின் உட்பட 440 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு காணப்பட்டது. இருப்பினும் உரிய அனுமதி இல்லாம் திடீரென சில வீடுகள் முற்றுகையிடப்பட்டது சட்டவிரோதமானது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் போதைப்பொருட்களை சோதனையிட எப்போதும் வாரண்டுகள் தேவையில்லை என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், போதைக்கு அடிமையான 1,097 பேர் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் குற்றவாளிகள் வாகனங்கள், குறித்த சொத்துக்கள் பரிமுதல் செய்யப்பட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நிபுணர்களின் கூற்றுப்படி, கடத்தல்காரர்கள் இலங்கையை ஒரு மையமாகப் பயன்படுத்துகின்றனர், மேலும் ஹெரோயின், ஹாஷிஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் – கடுமையான பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
கிறிஸ்மஸுக்காக தேடுதல்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.