ஐரோப்பா

அனைத்து சட்டங்களும் முழு அளவில் பயன்படுத்தப்படும் : பிரித்தானிய காவல்த்துறை எச்சரிக்கை!

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் லண்டனின் பெருநகர காவல்துறை நகரத்தில்  யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு  குற்றங்கள் வியத்தகு அளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் யூத சமூகங்களுக்கு எதிராக இந்த மாதத்தில் 408 யூத எதிர்ப்பு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 28 ஆக இருந்த நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மோதலுடன் தொடர்புடைய 75 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் அனைத்து சட்டங்களையும் அதன் முழு அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதை உறுதிசெய்கிறோம். இந்த நேரத்தில் ஏதேனும் குற்றங்கள் நடப்பதைக் காணும் எவரும் அதை அருகிலுள்ள காவல்துறை அதிகாரிக்குத் தெரிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்