அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலம் பெயர்ந்தோரை ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்து அது தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகம் முழுவதற்கும் அதிபர் டிரம்ப் கடுமையான- தெளிவான செய்தியை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)