வேற்றுக்கிரகவாசிகள் பல கிரங்களில் இருக்கலாம் – ஆய்வாளர்கள் கருத்து!
நாம் நினைத்ததை விட வேற்றுகிரகவாசிகளின் தாயகமாக இருக்கக்கூடிய பல கிரகங்கள் இருக்கலாம் என புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் “வாழக்கூடிய” அல்லது “கோல்டிலாக்ஸ்” (goldilocks) மண்டலத்தில் உயிர்களைத் தேடி வருகின்றனர்.
ஒரு கிரகத்தை வாழத் தகுதியானதாக மாற்ற திரவ நீர் அவசியம் என்று நாங்கள் நம்புவதால், அந்த உலகங்கள் வேற்றுகிரகவாசிகளுக்கான நமது தேடலின் மையமாக உள்ளன.
நாம் கண்டறிந்த பிற சூரிய மண்டலங்களில் உள்ள பல கிரகங்கள் அந்த அளவுகோல்களுக்குள் பொருந்தவில்லை. அதாவது அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், இப்போது அளவுகோல்கள் மிகவும் கண்டிப்பானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திரவ நீரை அனுமதிக்கும் பிற உலகங்கள் இருக்கலாம், அதை நாம் கவனிக்கவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிரகத்தின் பகல் பக்கத்திலிருந்து வெப்பம் வந்து இரவுப் பக்கத்தை உறைபனிக்கு மேல் வைத்திருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, வாழக்கூடிய சூழல்களின் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியால் கண்டறியப்பட்ட சில கிரகங்கள், நீராவி மற்றும் பிற ஆவியாகும் வாயுக்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றுவதாகவும், அவற்றின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள்த கூறுகின்றனர்.




