அலெக்ஸி நவல்னிக்கு விஷம்; ரஷ்யாவை கண்டித்துள்ள ஐரோப்பிய நீதிமன்றம்
எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விடயத்தில் ரஷ்யாவை கண்டித்துள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2020ஆம் ஆண்டு இவர் கோமாவில் விழுந்தார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடரில் விசாரணை நடத்த ரஷ்யா தவறியதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தற்போது ரஷ்யாவை கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக ECHR கூறும்போது, ‘கொலை முயற்சிக்கான சாத்தியமான அரசியல் உள்நோக்கம் மற்றும் அரச முகவர்களின் சாத்தியமான ஈடுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளை ஆராய்வதில், ரஷ்யா குறிப்பிடத்தக்க வகையில் தோல்வியடைந்துள்ளது’ என தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க மறுத்துவிட்டதாகவும் ECHR கூறியுள்ளது.
ECHR ரஷ்ய குடிமக்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் நிலுவையைக் கொண்டுள்ளது மற்றும் தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.