ஆல்டி: கிறிஸ்துமஸ் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ‘அமைதியான ஷாப்பிங் நேரம்.
ஆல்டி சூப்பர்மார்க்கெட்டில் கிறிஸ்துமஸ் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கான ‘அமைதியான ஷாப்பிங் நேரங்கள்’ அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பல்பொருள் அங்காடிகளில் ஏற்படும் பெரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்பும் கடைக்காரர்களுக்காக, சர்வதேச சூப்பர்மார்க்கெட் சங்கம் ஆல்டி (Aldi) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்ட ஆல்டி, ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பண்டிகைக் காலத்தில் அதன் கடைகளில் அமைதியான நேரங்களை ஆல்டி அறிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நெரிசலின்றி நிதானமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்யலாம். ஆல்டி வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, கடைகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பொதுவாக மிகவும் அமைதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இந்த ஆண்டுக் கிறிஸ்துமஸுக்கு முன்னர் டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 24 ஆம் திகதிகள் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மிக அமைதியான நாட்களாக இருக்கும் என்றும் ஆல்டி மதிப்பிட்டுக் கூறியுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர் நலனை மேம்படுத்தும் ஒரு புதிய நடவடிக்கையை ஆல்டி எடுத்துள்ளது.





