விமானி உட்பட 10 பேருடன் அலாஸ்கா விமானம் மாயம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Bering-Air-Plane-Disappears-Near-Nome-Alaska-1296x700.webp)
அலாஸ்காவில் நோம் நகருக்கு அருகே பத்து பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது.
பெய்ரின் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் அதில் 9 பயணிகளும் விமானியும் இருந்ததாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அந்த நாட்டு அதிகாரிகளின் கூற்றுப்படி, கேள்விக்குரிய விமானம் விபத்துக்குள்ளானிருக்கலாம்.
வெளிநாட்டு அறிக்கைகள், தேடுதல் நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வானிலை காரணமாக அவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன.
(Visited 2 times, 2 visits today)