Tamil News

இடியாப்ப சிக்கல் போல் இழுபறியாக இழுத்துக் கொண்டிருக்கும் அஜித்தின் “விடாமுயற்சி”

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் இடியாப்ப சிக்கல் போல் இழுபறியாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இன்று வரை படப்பிடிப்பு தொடங்காமலேயே இருக்கிறது. படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தாண்டி வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். தற்போதைய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை என்பது லைக்கா நிறுவனம் தான்.

பல முன்னணி ஹீரோக்கள் லைகா நிறுவனத்திடம் படம் பண்ணவே முன்னுரிமை அளிக்கிறார்கள். அந்த அளவுக்கு இவர்களின் பட்ஜெட் ஆக இருக்கட்டும், படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் விதமாக இருக்கட்டும் அத்தனையுமே பக்காவாக இருக்கும்.

ஆனால் விடாமுயற்சி படத்தை பொறுத்தவரைக்கும் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலி என்று தான் சொல்ல வேண்டும். முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிறது. அதன் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அடுத்து இந்த படத்தை இயக்கப் போவது யார் என்று கேள்வியை மிகப்பெரிய போராட்டமாக பல மாதங்களாக நடந்து வந்தது. அதன்பின்னர் இயக்குனர் மகிழ் திருமேனி உறுதி செய்யப்பட்டார்.

படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கார்டு கொடுக்கப்பட்டதோடு, லைகா நிறுவனத்தின் மீது ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சில ஆவணங்களை முடக்கி வைத்திருக்கிறது வருமான வரித்துறை.

இதுதான் தற்போது லைக்கா மாட்டி இருக்கும் பெரிய சிக்கல். ஆவணங்கள் முடக்கப்பட்டு இருப்பதால் கைவசம் இருக்கும் படங்களை மட்டும் கையகப்படுத்த இந்த நிறுவனம் முடிவு எடுத்து இருக்கிறது.

ஆனால் ஆவண முடக்கத்தால் லைகாவால் புதிய படத்திற்கு பணத்தை எடுத்து செலவு பண்ண முடியாது. இதனால் தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது அந்த நிறுவனம். இந்த ஐடி ரெய்டினால் தான் மே மாத இறுதியில் தொடங்க வேண்டிய படப்பிடிப்பு கூட அப்படியே நிறுத்தப்பட்டு இருக்கிறது அடுத்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கூட சரியாக தெரியவில்லை.

இதனால் லைகா நிறுவனம் தங்களுடைய நிலையை நடிகர் அஜித்குமார் இடம் தெளிவாக சொல்லிவிட்டது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த படம் எப்படியும் கைவிடப்படாது. அதற்கு பதிலாக கொஞ்சம் காலதாமதமாக லைகா நிறுவனமே தயாரிக்கும்.

அல்லது வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த படம் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போதைக்கு சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Exit mobile version