வந்தாச்சு “AK 66” அப்டேட்… அஜித் – லோகேஷ் இணைவு 100% உறுதி

நடிகர் அஜித் குமார் தற்போது எல்லா விதத்திலும் பிசியாக இருந்து வருகிறார். ஆனால் அடுத்தடுத்து அஜித் படங்கள் பற்றிய அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது.
என்னதான் மேனேஜர் கதை கேட்டாலும் அதற்கு ஓகே சொல்வது என்னவோ அஜித் தானே. அப்போ அவரோட விஷயங்கள் எல்லாத்தையுமே அவர் மறக்காம செய்து வருகிறார் அதனாலதான் என்னவோ இளைஞர்கள் இவரை ரோல்மாடலாக எடுத்துள்ளார்கள் போல.
ஏற்கனவே “AK 64”, “AK 65” அப்டேட்லாம் ஏற்கனவே வந்தாச்சு இந்த அப்டேட்கே தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் மிதந்துகொண்டுள்ளனர் ரசிகர்கள். இதில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் “AK 66” அப்டேட் வந்திருக்கு. அதும் இயக்குனரே சொல்லிருக்காங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று.
ஆமாம், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார்.
100% அஜித்தை வைத்து படம் பண்ணப்போவது உறுதி. அஜித் சார் உடைய ஆக்ஷன், மாஸ் அப்படியே முழுமையாக நான் பயன்படுத்திக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் சந்திரா மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். எல்லாம் முடியும் தருவாயில் உள்ளது. கண்டிப்பாக இந்த படம் விரைவில் தொடங்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ். இவர் கண்டிப்பாக அஜித்தை வைத்து இயக்கினால் படம் வேற லெவெலாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் அஜித் கூட்டணி போடுகிறார் என்றால் படம் இப்போவே பாதி ஹிட் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்களாம்.