முழு அரச மரியாதையுடன் அஜித் பவாரின் உடல் தீயுடன் சங்கமம்!
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது.
பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர்.
இறுதிச் சடங்கில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்று விழிநீருடன், துணை முதல்வருக்கு விடை கொடுத்தனர்.
அஜித் பவார் நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராமதிக்கு ‘லியர்ஜெட் 45’ என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார்.
விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உட்பட ஐவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




