மும்பையில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது மோதிய பேருந்து

மும்பையின் ஜூஹு புறநகர்ப் பகுதியில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் சொகுசு கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது, விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்) நிறுவனத்தின் பேருந்து, உயர் ரக காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என்றும், பின்னால் இருந்து பேருந்து மோதியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
(Visited 3 times, 1 visits today)