செய்தி

மீண்டும் இணையும் அபிஷேக் – ஐஸ்வர்யா ராய்… களத்தில் குதித்தார் மணிரத்னம்

நடிகர் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

கடந்த பல வருடங்களாக சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென பல நேர்மறையான செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

அதாவது ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் அவர்கள் இரண்டு பேரும் பிரியவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

மேலும் இந்தப் பிரச்னைக்கு காரணமே அபிஷேக்கின் தாயான ஜெயாதான்; அவர்தான் ஐஸ்வர்யா ராயை ரொம்பவே அதிகாரம் செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதனை ஜெயா பச்சன் திட்டவட்டமாக மறுத்தார். மேலும் ஐஸ்வர்யா ஒன்றும் எனது மகள் அல்ல அவர் மீது அதிகாரம் காட்டுவதற்கு என்றார்.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அபிஷேக் பச்சனும் இந்த விஷயத்தை மறுத்தார். மேலும் திருமணத்தின்போது அணிந்திருந்த மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கையில் இல்லாததை வைத்து ஏகப்பட்ட கதைகள் கட்டப்பட்டன.

ஆனால் அந்தக் கதைகள் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அந்த மோதிரத்தை மீண்டும் அணிந்திருந்தார் ஐஸ்வர்யா. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்பது உறுதியானது.

ஆனால் மீண்டும் கடந்த சில நாட்களாக இரண்டு பேருக்கும் பிரச்னை என்றும்; விரைவில் அவர்களது விவாகரத்து விவகாரம் வெளியாகும் என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பேர் பற்றியும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதன்படி தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் ஒரு காதல் கதையை ஹிந்தி, தமிழில் இயக்கப்போவதாகவும்; அதில் ஜோடியாக அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக இரண்டு பேரும் சேர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் குரு, ராவணன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து சர்ச்சை வெடித்துவரும் சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பேரும் மீண்டும் இணையவிருக்கிறார்கள் என்று வெளியாகியிருக்கும் தகவல் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையட்டும் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி