சூடானில் வான்வழித் தாக்குதல் : 17 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

சூடானின் கார்டோமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யர்மூக் மாவட்டம் வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் 25 வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கு இடையிலான சண்டையானது மூன்றுமாதங்களாக நீடித்து வருகிறது.
இந்த உள்நாட்டு மோதல் காரணமாக இதுவரை 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)