இலங்கை

இலங்கையில் தங்க பிஸ்கட்டுக்களுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் நான்கு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (21) காலை விமானத்தில் வந்த நபர் ஒருவர் 18 தங்க பிஸ்கட்டுகளை புலம்பெயர்ந்த விமான பயணிகள் முனையத்தின் மலசலகூடத்தில் வைத்து குறித்த அதிகாரியிடம் கொடுத்துள்ள நிலையில், அவர் அவற்றை தனது ஆடையில் மறைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 02 கிலோ 86 கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 ஆயிரம் ரூபாவுக்காக குறித்த தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திலிருந்து வௌியே எடுத்துச் செல்ல இந்த பாதுகாப்பு அதிகாரி முயற்சித்ததாக சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!