விரைவில் மதுரை – யாழ்ப்பாணம் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவை
மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மதுரை – கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)