இந்தியா செய்தி

புதுடில்லியில் ஆபத்தாக மாறும் காற்றின் தரம் – கடுமையாகும் கட்டுப்பாடுகள்

இந்திய தலைநகர் புதுடில்லியில் காற்றுத் தூய்மைக்கேடு மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

24 மணி நேரத்தில் இரண்டு முறை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காற்றுத் தரக் குறியீடு மோசமான நிலையை எட்டியது.

அதனால் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் பிரச்சினையைக் கையாளச் சந்தித்துப் பேசினர்.

பாடசாலைகளில் நேரடியாகவும் இணையம் வழியாகவும் வகுப்புகளை நடத்துவதற்குப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. முதலில் ஐந்தாம் வகுப்பு வரை இத்தகைய ஏற்பாட்டில் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

பின்னர் 10ஆம் 12ஆம் வகுப்புகளைத் தவிர்த்து ஏனைய வகுப்புகளைக் கணினி வழியாகவும் நேரடியாகவும் நடத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

வேலையிடங்களில் ஊழியர்களில் 50 சதவீதம் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான கோரிக்கைகளை அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிள்ளைகள், மூத்தோர், மூச்சுப் பிரச்சனை, இதய பிரச்சனை உள்ளிட்ட நாட்பட்ட நோயாளிகள் ஆகியோர் வெளிப்புறத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படியும் ஆலோசனை கூறப்பட்டது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!