ஐரோப்பா

கேனரி தீவுகளில் காற்றின் தரம் மோசமடையும் : சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

கேனரி தீவுகளில் நாளைய தினம் (25.12) கடுமையான வெப்பநிலை பதிவாகும் என வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் உள்ள தேசிய வானிலை நிறுவனம் “கலிமா” என்ற தீவிர நிகழ்வு பற்றி அறிவுறுத்தியுள்ளது.

வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கிறிஸ்மஸ் ஈவ் முதல் கேனரி தீவுகளை, குறிப்பாக அதன் கிழக்கு தீவுகளை காற்றின் தரம் கணிசமாக மோசமடையும் என்று எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வாரம் இதுவரை, தீவுகள் மழை மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன, இது டெனெரிஃப் மற்றும் லா பால்மாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் பார்வை கோளாறு சம்பந்தமான சாத்தியமான பிரச்சினைகளை சந்திக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!