டெல்லியில் மாசு கட்டுப்பாடுகளை காற்றுதர மேலாண்மை ஆணையம் இரத்து செய்துள்ளது!
டெல்லி-என்.சி.ஆரில் மாசு அளவுகள் குறைந்துள்ள நிலையில், தரப்படுத்தப்பட்ட மறுமொழி செயல் திட்டத்தின் (GRAP) 4 ஆம் கட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) ரத்து செய்தது.
நகரத்தில் காற்றின் தரம் மோசமடைந்ததை அடுத்து, GRAP இன் நிலை 3 மற்றும் நிலை 4 இன் கீழ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
4 ஆம் கட்டக் கட்டுப்பாடுகளில் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை, அத்தியாவசியமற்ற மாசுபடுத்தும் லாரிகள் டெல்லிக்குள் நுழைதல் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர, பள்ளி வகுப்புகளை கலப்பின முறைக்கு கட்டாயமாக மாற்றுதல் ஆகியவை அடங்கும்.
அத்தியாவசியமற்ற டீசல் லாரிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட BS-IV மற்றும் பழைய டீசல் மூலம் இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள், நிலை 4 இன் கீழ் அத்தியாவசிய சேவைகளைத் தவிர, தடைசெய்யப்பட்டுள்ளன.