இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரத்தில் பாதிப்பு!
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகர்ப்புறங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) படி, பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவு காற்றின் தரம் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் நுவரெலியாவில் நல்ல நிலை காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று AQI முன்னறிவிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுவாசப் பிரச்சினைகள் அல்லது உணர்திறன் உள்ள நபர்கள் இந்த நிலை சுவாசிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தினால் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதேவேளை பெரும்பாலான நகரங்களில் AQI மிதமான மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





