ஆபத்தான நிலையில் காற்றின் தரம் – மருத்துவமனையில் குவியும் நோயாளர்கள்!
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் இன்று அபாயகரமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, பல பகுதிகளில், காற்று தரக் குறியீடு (AQI) சுமார் 450 ஆக பதிவாகியுள்ளது. இது காற்று மாசுபாட்டின் தரத்தின் அடிப்படையில் “கடுமையானது” என்று கருதப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மோசமாகவே உள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் சுவாச பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் உள்ள அதிகாரிகள் சுகாதார ஆலோசனைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





