இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த வளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
(Visited 21 times, 1 visits today)