வளிமாசடைவு – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்நேர காற்று தர குறியீட்டு (AQI) தரவுகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கதுருவெல, சிலாபம், அகரகம, திகன, ஹங்குனுகம, அக்கறைபற்று, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சுகாதார அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், வெளியே செல்லும்போது பாதுகாப்பு முக கவசங்களை அணியவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





