டெல்லியில் உச்சம் தொட்ட காற்று மாசுப்பாடு – 40 விமானங்கள் இரத்து!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக ஏறக்குறைய 40 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. டஜன் கணக்கான விமானங்கள் தாமதமாகின.
புதுடெல்லியில் இருந்து புறப்படும் 50இற்கும் மேற்பட்ட ரயில்கள் பல மணிநேரம் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவாசக் கஷ்டங்கள் மற்றும் கண் எரிச்சல் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியின் காற்று மாசுபாடு அளவுகள் கடந்த இரண்டு நாட்களாக அதி உச்ச நிலையில் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது ஆரோக்கியமான மக்களுக்கு சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றும் இதயம் அல்லது நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.





