கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானி
கனடாவின்(Canada) வான்கூவர்(Vancouver) விமான நிலையத்தில் மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது.
வான்கூவரில் இருந்து டெல்லிக்கு(Delhi) புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.





