உலகம் செய்தி

மங்கோலியாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து(San Francisco) டெல்லிக்கு(Delhi) செல்லும் ஏர் இந்தியா(Air India) விமானம், மங்கோலியாவின்(Mongolia) உலான்பாதரில்(Ulaanbaatar) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா வழியாக இயக்கப்படும் AI174 ஏர் இந்தியா விமானம், உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறங்கியது, தற்போது தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். ஏர் இந்தியாவின் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்கு தங்குமிட வசதி மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!