அரசாங்கத்தின் அறிவிப்பை மீறி மீளவும் போராட்டத்தில் இறங்கிய ஏர் கனடா ஊழியர்கள்!

ஏர் கனடா விமான ஊழியர்கள் கடந்த வாரம் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர்.
விமான நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்த முறையை எதிர்த்து அவர்கள் இந்த தொழில்துறை நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பல நாட்கள் நீடித்த இந்த வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஏறக்குறைய 10,000க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 130,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதற்கிடையே அரசாங்கமானது உடனடியாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை மீறி மீண்டும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)