இஸ்தான்புல்லைத் தொடர்ந்து.. ஐரோப்பா முழுவதும் பறக்க தயாராகும் எயார் ஏசியா
ஐரோப்பாவுக்கான நீண்ட நேர விமானச் சேவைகளை அறிமுகம் செய்ய மலேசியாவின் எயார் ஏசியா எக்ஸ் (AirAsia X) விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு நேரடி விமானச் சேவையை எயார் ஏசியா எக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.
கோலாலம்பூருக்கும் இஸ்தான்புலுக்கும் இடையே வாராந்திரம் நான்கு சேவைகளை எயார் ஏசியா எக்ஸ் நிறுவனம் முன்னெடுக்கிறது.
இந்த சேவைகளை நாள்தோறும் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியாவைத் தாண்டி நிறுவனம் செயல்பட விரும்புவதாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஐரோப்பாவின் எந்த நாடுகளுக்கு நேரடியாக விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பான தகவலை நிறுவனம் வெளியிடவில்லை.





