இஸ்ரேலுக்கு கிடைத்த உதவி – ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோள்

உக்ரைனுக்கும் நட்பு நாடுகள் உதவ வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.
ஈரான் தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிபோன்று, ரஷ்யாவின் தாக்குதல்களைத் தடுத்து தற்காத்துக்கொள்ள உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காணொளி செய்தியில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களமிறங்கி தாக்குதலை முறியடிக்க உதவி செய்ததை உலகமே கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ரஷ்யா தினமும் தாக்கி வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 130 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை தடுத்து வீழ்த்தியதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)