அறிவியல் & தொழில்நுட்பம்

புகைப்படத்தில் இருந்து வீடியோ உருவாக்கும் AI கருவி..!

ஸ்மார்ட்போன் இல்லாத நபரை பார்ப்பது அதிசயம் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. மொபைலை கையில் வைத்திருக்கும் அனைவரும் தங்களின் சிறப்பு மிக்க தருணங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்ள தவறுவதே இல்லை.

நினைவுகளை நியாபக பரிசாக கொடுக்கும் புகைப்படங்களை தத்ரூபமாக வீடியோவாகவும் உருவாக்க முடியும். அதற்கான தொழில்நுட்பங்கள் எல்லாம் இப்போது ஏராளமாக வந்துவிட்டன. செயற்கை நுண்ணறிவு கருவிகள் எல்லாம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அம்சங்களை எல்லாம் சேர்த்து தரமான வீடியோவாக உருவாக்கி கொடுத்துவிடும்.

வீடியோ எடுக்க நல்ல கேமரா மொபைல்களை மக்கள் தேடிய காலமும் இன்னும் சில வருடங்களில் மலையேறிவிடும் போல் தெரிகிறது. ஏனென்றால் புகைப்படங்களையே வீடியோவாக கொடுக்கும் கருவிகள் வந்துவிட்டதால், இது நிகழாது என்று யாரும் உறுதியாக சொல்ல முடியாது. தொழில்நுட்பங்களால் மூளைக்கு எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தி காட்ட முடியும் என்பது ஏஐ கருவிகள் வந்த பிறகு நிரூபணமாகிவிட்டது. அந்தவகையில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றிக் கொடுக்கும் தொழில்நுட்பம் ஒன்றை பற்றி இங்கே பார்க்கலாம். புகைபடத்தை பதிவேற்றிய சில மணி துளிகளில் உங்களுக்கு வீடியோ கிடைத்துவிடும்.

புகைப்படத்திலிருந்து வீடியோவை உருவாக்குவது எப்படி?

1. runwayml.com என்ற இணையதளம் புகைப்படங்களிலிருந்து வீடியோவை உருவாக்க உங்களுக்கு உதவும்.
2. முதலில் இந்தப் பக்கத்தில், உங்களுக்கு என பிரத்யேகமான உறுப்பினர் கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.
3. இதற்குப் பிறகு, இணையதளத்தில் Image to Video என்ற இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
4. இதற்குப் பிறகு மோஷன் பிரஷ் ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
5. இந்த ஆப்சனில், நீங்கள் புகைப்படத்திலிருந்து வீடியோவாக மாற்ற விரும்பும் புகைப்படத்தைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
6. எந்த மாதிரியான டிசைன் மற்றும் கலர் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.
7. பிறகு Generate என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
8. சிறிது நேரம் கழித்து உங்கள் புகைப்படம் வீடியோவாக மாற்றி கொடுக்கப்படும்.

இந்த ஒரு தளம் மட்டும் அல்ல, இன்னும் சில ஏஐ வீடியோ தளங்கள் இருக்கின்றன. அவைகளும் உங்கள் புகைப்படங்களை வீடியோவாக மாற்றிக் கொடுக்கும். இது சார்ந்த தேடல்களை நீங்கள் விரிவுபடுத்தினீர்கள் என்றால் புகைப்படத்தில் இருந்து வீடியோவாக மாற்றும் பல தொழில்நுட்பங்களை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!