கணினி பயன்பாட்டில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகும் AI!
தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தி உள்ள ஏஐ, கணினி பயன்பாட்டையும் மாற்றி அமைக்க உள்ளது.
பூமி கண்டிராத மாற்றங்கள் கணினி வருகைக்குப் பிறகு பூமியில் நிகழத் தொடங்கியது. தற்போது அதற்கு மாற்றாக தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சூழலையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆரம்பித்து இருக்கிறது ஏஐ தொழில்நுட்பம். இதன் வளர்ச்சி சமூகத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் கணினி பயன்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்திருப்பது, கணினி பயன்பாடு வரக்கூடிய காலங்களில் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது. கணினி பயன்பாட்டை எளிமைப்படுத்த சில ஷார்ட் கட் மெத்தடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் கீ போர்டை கொண்டு டைப்பிங் செய்யும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு விதமான பயன்பாட்டை பெறவும் அதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கக்கூடிய அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இவற்றிற்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பம் உருவெடுத்து இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் வரக்கூடிய காலங்களில் உரையாடல் மூலமாக கணினியை செயல்படுத்த இருக்கிறது. வட்டார மொழிகளில் எளிமையான முறையில் டிவைஸை தங்களது சொற்களால் மனிதர்கள் கட்டுப்படுத்த இருக்கின்றனர். இதன் மூலம் மின்னஞ்சல் அனுப்ப, பல்வேறு வகையான தகவல்களை பகிர, டேட்டா ஸ்டோரேஜ் ஆராய முடியும். இது மட்டுமல்லாமல் இனி தனித் தனி அப்ளிகேஷன்கள் பயன்படுத்தும் நிலை வெகுவாக குறையும்.
ஒட்டுமொத்த உலகத்தையும் ஏஐ தொழில்நுட்பம் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் மேலும் எளிமைப்படுத்த இருக்கிறது. அதே சமயம் இது ஆபத்து கிடையாது. வாகனங்கள் வந்த தொடக்க காலத்தில் விபத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்பட்டன. அதன் பிறகு வேக கட்டுப்பாடு என்ற பல்வேறு விதிமுறைகள் பாதுகாப்பை உறுதி செய்தன. அது போல தான் இந்த தொழில்நுட்பமும் என்று தெரிவித்துள்ளார்.