பிரித்தானிய வீதிகளில் AI கமராக்கள் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட AI கமராக்களின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 3 நாட்களில் வீதி பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
AI கமராவின் இந்த ஓட்டுநர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி பொலிஸார் இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர்.
அதில் வாகனம் ஓட்டியபடி கையடக்க தொலைபேசிகளில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை AI கமரா சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த காட்சியை மனிதவளத்தை கொண்டு உறுதி செய்த பின்னர் அபராதம் விதிக்கலாம் என பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)