அஹங்கம கொலைச் சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
அஹங்கமவில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காலிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
46 மற்றும் 41 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் மாகொல்ல மற்றும் உனவடுன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களின் இருப்பிடம் தொடர்பில் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071-8591452 / 071-8583762 / 071-8591465 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)