இந்தியா

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் – வரி குறைப்பை அறிவித்தார் ட்ரம்ப்!

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரியை 18 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திய பிறகு, வரிகளைக் குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரி குறைப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி,  அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!