05 வருடங்களுக்கு பின் சீன மக்களுக்கு விசா வழங்கும் இந்தியா!

சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்மூலம் 5 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்குகிறது.
ஜூலை 24 முதல் சீன குடிமக்கள் சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு COVID-19 தொற்றுநோய் பரவலின் போது சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தியா தடை செய்தது.
22,000 இந்திய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்த சீனாவின்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுற்றுலா விசாக்களை வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரு நாடுகளும் டெபாசாங் மற்றும் டெம்சோக் எல்லைகளில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற முடிவு செய்தன, இது கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்க உதவியது.
இரு நாடுகளும் டெல்லியில் இருந்து சீனாவிற்கும், டெல்லியில் இருந்து சீனாவிற்கும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அண்மையில் அறிவித்தன.
மேலும் கடைசியாக சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.