கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலரா தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஆப்பிரிக்க நாடுகள்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆப்பிரிக்கா மிக மோசமான காலரா நோயை சந்தித்து வருகிறது.
அங்கோலா(Angola) மற்றும் புருண்டி(Burundi) நாடுகளில் மீண்டும் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக ஆப்பிரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான பொது சுகாதார நிறுவனமான ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), 2025ம் ஆண்டில் இதுவரை சுமார் 300,000 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் காலரா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“நாட்டில் காலரா இன்னும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது,” என்று ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இயக்குநர் ஜெனரல் ஜீன் கசேயா(Jean Kassayo) ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2025ம் ஆண்டில் இதுவரை அங்கோலாவில் 33,563 காலரா நோயாளிகள் காணப்பட்டனர், இதன் விளைவாக 866 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் புருண்டியில் 2,380 பேர் பாதிக்கப்பட்டனர், இதனால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலரா என்பது பொதுவாக மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடிக்கும்போது அல்லது திறந்த காயங்கள் வழியாக தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது பரவும் ஒரு பாக்டீரியா நோயாகும்.




