செய்தி விளையாட்டு

Emerging Asia கோப்பையை வென்ற ஆப்கானிஸ்தான் அணி

ஓமன், அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற ஆசியாவில் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான T20 கிண்ண இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக Sahan Arachchige ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Bilal Sami 3 விக்கெட்டுக்களையும், AM Ghazanfar 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்ற வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Sediqullah Atal, ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் Sahan Arachchige, Dushan Hemantha மற்றும் Eshan Malinga ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

See also  புடின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசியலில் களமிறங்கவுள்ள யூலியா நவல்னயா

இலங்கை அணி இதற்கு முன்னர் 2 முறைகள் (2017, 2018) இறுதிப் போட்டியில் விளையாடியுள் நிலையில், 2 போட்டிகளிலும் இலங்கை அணி செம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இதுவே முறையாகும்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content