ஆசியா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 4000 ஆக உயர்ந்துள்ள பலியானோர் எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் உருவானது.40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக 8 முறை அதிர்வுகளை ஏற்படுத்தியது.இதனால் அப்பகுதி முழுவதும் நிலைகுலைந்தது, அத்துடன் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு உடனடியாக சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சனிக்கிழமை கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.மேலும் ஆண்கள்,பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், 20 கிராமங்களில் இருந்த 1983 வீடுகள் தரைமட்டமாக ஆனதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Senior Taliban officials visit villages struck by earthquake that killed at  least 2,000 people

இந்நிலையில் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 பேரிடர் மீட்பு குழு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்