பாலியல் குற்றச்சாட்டு – UKவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆப்கான் பிரஜைகள்!
பிரித்தானியாவில் இரண்டு ஆப்கான் இளைஞர்கள் 15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஜான் ஜஹான்சீப் (Jan Jahanzeb) மற்றும் இஸ்ரார் நியாசல் (Israr Niazal), என அறியப்படும் இருவரும் லீமிங்டன் (Leamington ) நகர மையத்திற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட பின் வார்விக் கிரவுன் (Warwick Crown Court) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.
இதன்படி நியாசலுக்கு ஒன்பது ஆண்டுகளும், 10 மாதமும் கூடிய தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜஹான்சீப்பிற்கு 10 ஆண்டுகள், 08 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




