ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் ஆக்ரா பயணம் ரத்து

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்து செய்யப்பட்டதற்கான எந்த காரணத்தையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை. மேலும், முத்தாகியின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாஜ்மஹாலைப் பார்க்க ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆக்ராவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பயணம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல தடைகளை தாண்டி 6 நாள்கள் பயணமாக ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார்.
இந்த பயணத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
மேலும், 2021ம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மூடப்பட்ட காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.