மெக்ஸிகோ எல்லையில் இடம்பெற்ற பாச போராட்டம் : பிரிந்த குடும்பத்தினர் ஒன்றுக்கூடிய தருணம்!
மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த தங்களது அன்புக்குரியவர்களை பார்ப்பதற்கு நேற்று (02.11) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரியோ கிராண்டே வழியாக சென்று அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்தித்தனர். இதனால் பெரும்பாலானவர்கள் கண்ணீருடன் காணப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த ஆண்டு, புலம்பெயர்ந்தோர் உரிமைகள் வாதிடும் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது.
“நாடுகடத்தல் கொள்கை, எல்லைக் கொள்கை, குடியேற்றக் கொள்கை, குடும்பங்களை அசாதாரணமான முறையில் பிரித்து, இந்தக் குடும்பங்களை ஆழமாகப் பாதிக்கிறது,” என்று புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நெட்வொர்க் தெரிவித்துள்ளது.





