இலங்கையில் வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை!
வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், சட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து நீதி அமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்த வேண்டியவர்கள் என இனங்காணப்பட்ட வரி செலுத்துவோர் கூட வரி செலுத்தாதது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் 15 வருடங்கள் வரி செலுத்துவதில் தவறிழைக்க முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
30.06.2023 அன்று நிலுவையில் உள்ள வரி வருமானம் 943 பில்லியன் ரூபா என உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் வசூலிக்க முடியாத தொகை 767 பில்லியன் ரூபாய் ஆகும்.
(Visited 6 times, 1 visits today)