ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடற்ற வழிமுறைகளின் ஊடாக கிடைக்கும் தடுப்பூசி குறித்து அறிவுறுத்தல்!
கட்டாய மெனிங்கோகோகல் தடுப்பூசி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடற்ற வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசியான ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக வழங்கப்படுகிறது. இலங்கையில் இந்த தடுப்பூசி கையிருப்பில் இல்லை என அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த தடுப்பூசியானது கட்டுப்பாடற்ற வழிமுறைகள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு தற்போது சில நிறுவனங்களால் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த தடுப்பூசி ஆண்டு முழுவதும் செலுத்தப்படும் மருந்து அல்ல எனத் தெரிவித்த அவர், ஹஜ்ஜுக்கு புறப்படும் இலங்கை யாத்ரீகர்களுக்கு இது ஒரு பருவகாலத் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், இது தற்போதைய சூழ்நிலையில், போதைப்பொருள் மாஃபியாவுக்கு லாபம் ஈட்ட வழிவகை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் இலங்கை யாத்ரீகர்களுக்கு அரசாங்கம் மாற்று வழியை வழங்க வேண்டும், எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.