பிரித்தானியாவில் விளம்பரப்படுத்தப்படும் சம்பளம் முதல் முறையாக 40 ஆயிரம் பவுண்ட்ஸாக அதிகரிப்பு!
பிரித்தானியாவில் சராசரியாக விளம்பரப்படுத்தப்பட்ட சம்பளம் முதல் முறையாக £40,000ஐ தாண்டியுள்ளது.
2023-ல் இதே மாதத்தில் சராசரி விளம்பரப்படுத்தப்பட்ட சம்பளம் £37,577 காணப்பட்ட நிலையில் 7.15% தற்போது அதிகரித்துள்ளது.
இருப்பினும், வேலை காலியிடங்கள் ஆண்டுக்கு ஆண்டு 9.15% குறைந்துள்ளன. இதன் விளைவாக, ஒரு காலியிடத்திற்கு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 1.96-ல் இருந்து 2.05-ஐ எட்டியுள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வேலை இடுகைகளின் சராசரி கால அளவு 32.8 நாட்களில் இருந்து 34.1 நாட்களாக அதிகரித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)