ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

உலக சாதனை முயற்சி: ஹங்கேரி எல்லையை அடைந்த அவுஸ்திரேலிய வீரர்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பாராசூட் வீரர் கார்ல் புஷ்பி (Karl Bushby), கடந்த 1998-ஆம் ஆண்டு சிலியில் தொடங்கிய தனது 36,000 மைல் உலக நடைபயணத்தின் இறுதி அடியை எட்டியுள்ளார்.

எந்தவொரு வாகனத்தையும் பயன்படுத்தாமல், கடல் மற்றும் நிலப்பரப்புகளைக் கடந்து வந்துள்ள அவர், தற்போது ஹங்கேரி – ஆஸ்திரிய (Hungary -Austrian) எல்லையை அடைந்துள்ளார்.

விசா கெடுபிடிகள் காரணமாக தற்போது மெக்சிகோவில் ஓய்வெடுத்து வரும் கார்ல், வரும் மார்ச் மாதம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கி ஆஸ்திரியா, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாகச் சென்று ஒக்டோபர் மாதம் இங்கிலாந்தின் ஹல் (Hull) நகரில் உள்ள தனது தாயாரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆங்கிலக் கால்வாய் சுரங்கப்பாதை (Channel Tunnel) வழியாக நடந்து செல்ல அனுமதி கோரியுள்ள அவர், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நீண்ட கால இலக்கை அடையவுள்ள நிலையில், ‘தனது வாழ்க்கையின் ஒரு பகுதி முடிவுக்கு வருவதாக’ உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!