அவசர சிகிச்சைப்பிரிவில் அத்வானி
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி டில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி (வயது 94) டில்லியிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் இந்திரபிரஸ்தா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எல்.கே.அத்வானி மருத்துவ பரிசோதனைக்காக இந்திரபிரஸ்தா அப்பலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மூத்த நரம்பியல் நிபுணர் வினீத் சூரி தலைமையிலான குழுவின் கண்காணிப்பிலுள்ளார்.
தற்போது அத்வானியின் உடல்நிலை சீராகவுள்ளது’ – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.