போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருக்கு சம்மன்
போதைப்பொருள் பறிமுதல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சித்தான்த் கபூருக்கு(Siddharth Kapoor) மும்பை(Mumbai) காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
நடிகை ஷ்ரத்தா கபூரின்(Shraddha Kapoor) சகோதரரான சித்தான்த், நவம்பர் 25ம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ரூ.252 கோடி மெஃபெட்ரோன் பறிமுதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது சலீம் முகமது சுஹைல் ஷேக்கின்(Mohammed Salim Mohammed Suhail Sheikh) விசாரணையில் பாலிவுட் பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்ததால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (ANC) காட்கோபர்(Ghatkopar) பிரிவு சித்தான்த் கபூருக்கு சம்மன் அனுப்பியதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக சித்தான்த் கபூர் 2022ம் ஆண்டு பெங்களூரில்(Bengaluru) போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.




