இந்தியா செய்தி

நில மோசடி விவகாரம் – காஞ்சிபுரத்தில் நேரில் ஆஜராகிய நடிகை கௌதமி

பிரபல தமிழ் திரைப்பட நடிகை கௌதமி அவர் சினிமாவில் நடித்து வந்த காலத்தில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி இருந்தார்.

இந்நிலையில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக கடந்த மாதத்தில் இருந்து பரபரப்பு உண்டாகி இருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக அவரது மேலாளர் அழகப்பன் , அவரது மனைவி நாச்சால் உள்ளிட்ட ஆறு பேர் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று எஃப் ஐ ஆர் நகல் பெற தனது வழக்கறிஞர் மற்றும் சகோதரியுடன் நடிகை கௌதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

இதை அறிந்து செய்தியாளர்கள் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்றதை அறிந்து உடனடியாக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

செய்தியாளர் வந்ததை அறிந்த பதற்றத்தில் உடனடியாக நடிகை வெளியேறியதால் எப்.ஐ.ஆர். நகல் பெற்று செல்ல மறந்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!