பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் அவரது கணவர் கைது

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (04) கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 30 இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அவர்களை கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)